Conference Magazine

மாநாட்டு மலர்

அனைவருக்கும் வணக்கம்,

Oct 7 – 9, 2017 நடைபெறும் உலக தமிழிணைய மாநாட்டையொட்டி மாநாட்டுக்கு வரும் அனைவருக்கும் இலவசமாக கொடுக்குமுகமாகவும், மாநாட்டு மண்டபங்களில் நடைபெறும் நிகழ்ச்சி நிரல்களை உள்ளடக்கியதாகவும், வந்தவர்களுக்கு பயன்பெறும் ஆக்கங்களை உள்ளடக்கியதாகவும் 72 பக்கங்களை கொண்ட முழு வர்ணத்திலானான கணனி சிறப்பு மலர் வெளியிடப்படவுள்ளது.  இம்மலரில் வெளியிட கீழ்க்கண்ட பிரிவுகள்/ தலைப்புகளில் ஆக்கங்கள் வரவேற்கப்படுகின்றன.

மாநாட்டின் கருப்பொருள்

இணையவழிக் கற்றல்-கற்பித்தலின் இன்றைய நிலை

பிற தலைப்புகள்

  • கணனியில் / இணையத்தில் தமிழ் கற்றல் கற்ப்பித்தல்
  • குறுஞ்செயலிகள்
  • இணையத்தில் தமிழில் சந்தை மற்றும் வேலைவாய்ப்பு
  • இணையத்தின் மூலம் வியாபாரம்
  • சமூகவலைத்தளத்தின் பலாபலன்கள் (வர்த்தகம் மற்றும் நாளாந்த செயல்பாடுகள்)
  • தமிழ் இணைய மாநாட்டின் நன்மைகள்
  • SEO, Social Media & computer and Internet related articles

விழா மலரின் ஆக்கங்களுக்கான விதிமுறைகள்

  • அனைத்துப் படைப்புகளும் #TIC2017 இதழுக்காக மட்டுமே படைக்கப்பட்டு, வேறு எங்கும் வெளியிடப்படாத படைப்புகளாக இருத்தல் வேண்டும்.
  • படைப்புகள் முடிந்த அளவு இலகு தமிழில் இருக்க வேண்டும்.
  • ஆங்கில ஆக்கங்களும் இணைத்துக்கொள்ளப்படும்.
  • படைப்புகள் இரண்டு பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • படைப்புகள் ஒருங்குறி எழுத்துருவில், தொகுத்து வெளியிடும் வடிவில் இருக்க வேண்டும், (PDF கோப்புகள் தவிர்த்தல் அவசியம்).
  • படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: info@infitt.ca
  • படைப்புகளை அனுப்பவேண்டிய கடைசி நாள் – செப்டம்பர் மாதம் 10-ஆம் தேதி, 2017.

நன்றி